Ad Code

Responsive Advertisement

பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

வால்பாறையில் உள்ள பள்ளிகளில் கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளில், கோவை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் மல்லிகா நேரில் ஆய்வு நடத்தினார். வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எஸ்.ஏ., அலுவலகம், எஸ்.எஸ்.ஏ., உண்டு உறைவிடப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நேரடி ஆய்வு நடத்தினார்.
ஆய்வின்போது பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி உள்ளதா மற்றும் மாணவர்களின் கல்வித்தரம் குறித்தும் நேரில் ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது எஸ்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர்கள் இளங்கோவன், விஜயலட்சுமி, வால்பாறை மேற்பார்வையாளர் (பொ) ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement