Ad Code

Responsive Advertisement

பழைய ஓய்வூதிய முறையை அமுல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களையவேண்டும் உட்பட "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - இன் மாநில பொதுக்குழுவில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்களை 30/10/2014 அன்று தலைமை செயலகத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்யும்மாறு கேட்டுக்கொண்டார்.

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன்  மாநில பொதுக்குழு இன்று 26/10/2014 வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்றது. அப்பொதுக்குழுவில் பழைய ஓய்வூதிய முறையை அமுல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களையவேண்டும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணிப்புரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 5வது ஊதியக்குழுவின் நிலுவைத்தொகை வழங்கவேண்டும் என்பது  உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானங்களை  30/10/2014 வியாழன் அன்று தலைமை செயலகத்தில் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் தலைமையில்  மாநில சிறப்பு ஆலோசகர் திரு.இஸ்மாயில், மாநில தணிக்கையாளர் திரு.தேவராஜ்,  மாநில செய்தி செயலர் திரு.சதீஷ் ஆகியோர் நேரில் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க ஆவ செய்யும்மாறு வேண்டிக் கேட்டுக்கொண்டனர். 




தீர்மான நகல்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முதன்மை செயலர்  அவர்கள், உயர்திரு பள்ளிக்கல்வி அமைச்சரின் நேர்முக செயலர்  அவர்கள், உயர்திரு அரசு நிதித்துறை முதன்மை செயலர் அவர்கள், உயர்திரு பள்ளிகல்வி முதன்மை செயலர் அவர்கள், உயர்திரு மாநில பிற்படுத்தப்பட்டோர் நல செயலர்  அவர்களின் உதவியாளர், உயர்திரு கள்ளர் சீரமைப்பு பள்ளிகளின் ஆணையர்  அவர்களின் அலுவலகம்,  பள்ளிகல்வி இயக்குனர் உயர்திரு.ராமேஸ்வரமுருகன் அவர்கள், தொடக்கக்கல்வி இயக்குனர் உயர்திரு.இளங்கோவன்  அவர்கள் மற்றும் மேல்நிலைக்கல்வி இனைஇயக்குனர் உயர்திரு.பாலமுருகன் அவர்கள் ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கப்பட்டது. மனுவினை பெற்றுக்கொண்ட அனைவரும் கனிவோடு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.    


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement