விருதுநகர் மாவட்டத்திலுள்ள 26 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிச்சித் தகவல் ஆய்வுக் கூட்டத்தில் வெளியானது. தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் தலைமையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
மேலும், கழிப்பறைகள் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலமாகமோ, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் நிதி உதவி பெற்றோ, அரசியல் பிரமுகர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் மூலமாகவோ நிதி உதவிகளைப் பெற்று கழிப்பறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
சிறப்பு நிதிகளைப் பெற்று கழிப்பறை வசதி ஏற்படுத்தாத பள்ளிகளில் உடனே கழிப்பறை வசதி ஏற்படுத்தவும், பள்ளிகளில் போதிய பராமரிப்பின்றி பயன் படுத்த முடியாமல் உள்ள கழிப்பறைகளை சீரமைத்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சி களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை