Ad Code

Responsive Advertisement

CTET - மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: சென்னையில் 3,500 பேர் பங்கேற்பு

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பணியாற்றுவதற்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடைபெறுகிறது. சென்னையிலிருந்து இந்தத் தேர்வை 3,500 பேர் எழுத உள்ளதாக சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக சென்னையில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையைத் தவிர மதுரை, கோவை ஆகிய இடங்களிலும் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும், பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை முதல் தாள் தேர்வும் நடைபெறும். கேந்திர வித்யாலயப் பள்ளிகள், நவோதயா பள்ளிகள், சி.பி.எஸ்.இ.  பாடத்திட்டப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. இந்தத் தேர்வை நடத்துகிறது.

நாடு முழுவதும் 900-க்கும் அதிகமான மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வை சுமார் 8 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும். எனினும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஏற்ப தேர்வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement