Ad Code

Responsive Advertisement

செப்டம்பர் 25-ல் கிராம கல்விக்குழு கணக்காளர்களுக்கு செயல்முறை தேர்வு

அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் சார்பில் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 22 கிராம கல்விக்குழு கணக்காளர்களுக்கு வரும் செப்டம்பர் 22-ம் தேதி செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.


இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க விழுப்புரம் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் 2014-ம் ஆண்டில் தற்காலிக தொகுப்பூதிய கிராம கல்விக்குழு கணக்காளர்கள் காலிப் பணியிடத்தினை நியமனம் செய்யுமாறு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கிராமக் கல்வி குழு கணக்கானளர்கள் காலிப்பணியிடத்துக்கு பணி நாடுநர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த 169 பணி நாடுநர்களுக்கு நுழைவுத்தாள் அனுப்பப்பட்டது. இவர்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. அத் தேர்வில் 128 பணிநாடுநர்கள் பங்கேற்று அதில் 22 பணி நாடுநர்கள் செயல்முறைத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 22 பணி நாடுநர்களுக்கு டேலி செய்முறைத் தேர்வு வரும் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெறுகிறது.

 முதல் குழுவுக்கு செப்டம்பர் 25-ம் தேதி காலை 11 மணி முதல் 12 மணி வரையும், 2-வது குழுவுக்கு பிற்பகல் 3 மணி முதல் 4 மணிவரையும் நடைபெறும். இத் தேர்வுகள் விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட 22 பணி நாடுநர்களுக்கு செயல்முறைத் தேர்வில் பங்கேற்க அழைப்புக் கடிதம் பார்வை 2-ல் காண் கடிதம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement