Ad Code

Responsive Advertisement

இடைநிலை ஆசிரியர்களுக்கு இனி எப்படி பணிகிடைக்கப் போகிறது??? ஆசிரியர் சங்கங்கள் என்ன செய்கிறது??? ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்-!!!!!! அதற்கு தீர்வு என்ன?

வணக்கம் நண்பர்களே இன்று நாம்  பார்க்க இருக்கும் முக்கியமான ஒரு தலைப்பு  இடைநிலை ஆசிரியர்களுக்கு எப்படி இனி பணி கிடைக்கப்போகிறது. கிடைக்குமா நாம் எதிர்பார்த்து இருக்கலாம தற்போது என்ன தான் தமிழகத்தில் நடக்கிறது. ஒரு உண்மை ரிப்போர்ட் இது கட்டுக்கதையோ அல்லது புதிதாக எதையாவது கிளப்பி விடவேண்டும் என்ற நோக்கம் கொண்டு இந்த கட்டரை எழுதப்படவில்லை உண்மையை உரக்க சொல்கிறோம்.


இன்று அதிக அளவில் ஆசிரியர்களையும் அதிக சங்கங்களையும் கொண்டது தான் இடைநிலை ஆசிரியர்கள். தமிழகத்தில் ஆசிரியர்கள் போராட்டம் என்றால் மற்ற ஆசிரியர்களை விட இடைநிலை ஆசிரியர்கள் தான் முதலில் போர்கொடி துாக்குவர்கள் .எப்போதும் விழிப்புடன் இருக்கும் தொடக்ப்பள்ளி ஆசிரியர்கள் அவர்கள் பள்ளிகளில் 1 மற்றும் 2 குழந்தைகளை வைத்து பாடம் நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறர்கள். இன்னும் ஒருபடி மேலே போய் குழந்தைகள் இல்லை பள்ளியையே இழுத்தும் முடிஉள்ளது அரசு. ஏன் நமது நாட்டில் புதிதாக மக்கள் தொகை எதுவும் குறைந்து குழந்தைகள் அதிகம் பிறக்கவில்லையா! இல்லை குழந்தைகள் இடைநிற்றல் அதிகமாகிறதா!! இதற்கு பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டல் புலம்பி தள்ளுகிறார்கள்.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு  காலணி பாடப்புத்தகம் சீருடை என  மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு என அனைத்து பதிவேடுகளையும் பராமரிக்கின்றோம். எங்களுக்கு அரசு அனைத்து சுமையையும் தலையில் ஏற்றி வைத்துவிடுகிறார்கள் இதனால் எங்களால் சரியாக குழந்தைகளுக்கு பாடம் சொல்லிகொடுக்க முடியவில்லை அனைத்துப் குழந்தைகளும் தனியார் பள்ளியை நோக்கி சென்றுவிடுகிறார்கள் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் இதில் ஒரு கசப்பான உ ண்மை என்னவென்றால் அந்த பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை இன்று யாரும் அதிக அளவுக்கு அரசு பள்ளிகளில் படிக்கவில்லை மற்றவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்த்தால் ஆசிரியர்களின் குழந்தை CBSE பள்ளிகளில் படிக்கின்றனர் அவர்களிடம் கேட்டால் ஒரு பொருளை வாங்க பல முறை யோசிக்கும் போது எங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் அதில் நாங்கள் கண்டிப்பாக அக்கறை காட்ட வேண்டும் அதனால் தான் இதனை நீங்கள் பிரக்டிக்கல்லாக பாருங்கள் புரியும் என்றனர்.

சரி பெற்றோர்களிடம் கேட்டால் எங்கள் பிள்ளைகளை ஆங்கில அறிவு மற்றும் LKG இல் இருந்து சேர்த்தால் தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்கும் அரசு பள்ளிகளில் LKG இல்லை இன்னும் சிலர் Pre KG, Play School போன்றவை அரசு பள்ளியில் இல்லை இந்த அவசரமான உலகில் அதற்கு ஏற்றார் போல் எங்கள் குழந்தையையும் தயார் செய்ய வேண்டும் என்றார்.

இதில் இருந்து ஒன்று தெரிகிறது அரசைவிட இன்று நல்ல கல்வி வேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க தொடங்கி விட்டனர். நான் பார்த்த வரைக்கும் அரசு பள்ளிகளில் 75% பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை மிக மிக குறைவு இதே நிலை நீடித்தால் அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு கூட வேலை கிடைக்காது எப்படி தற்போது வெற்றி பெற்றவர்களுக்கு வேலை இனி வரும் காலங்களில் கிடைக்கும். 

இது குறித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடம் கேட்டதற்கு அவர் நான் ஓய்வு பெற்ற பள்ளியில் தற்போது எனது பணியிடம் உட்பட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது ஆனால் அதற்கு ஏற்ப மாணவர்கள் இல்லை இப்போதே அங்கு வேலை பார்க்கும் 8 ஆசிரியர்களுக்கு எண்ணிக்கை ஏற்ப மாணவர்கள் எண்ணிக்கை இல்லை அந்த ஆசிரியர்களே சர்ப்லஸ்லில் உள்ளனர் அவர்களுக்கே இனி எந்த பள்ளிக்கு பணிமாற்றம் செய்யப்போகிறார்களோ என கூறினார். இனி இதுபோல் இருக்கும் ஆசிரியர்களை வேறுபள்ளிகளுக்கு மாற்றுவார்கள் ஆனால் தமிழகம் முழுவதும் எங்கு பார்த்தாலும் சர்ப்லஸ் என்றால் புதிய காலிப்பணியிடம் இருக்கும் இடங்களுக்கு மாற்றினால் தான் அவர்களுக்கு அரசு பணி வழங்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கும் போது எப்படி இனி புதிதாக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் இருப்பது போல் எண்ணிக்கை காட்டி சமாளித்துக்கொண்டு தங்கள் இருக்கும் பள்ளியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சமாளித்து வருகின்றனர் அதனால் தான் புதிய பணியிடங்கள் உருவாகியது தற்போது கூட 2000 இடைநிலைஆசிரியர்கள் பணி உருவானது. ஆனால் தற்போது பள்ளிக்கல்வித்துறை சரியான எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகிறது வரும் கல்வியாண்டில் புதிய பணியிடங்கள் குறையும் மேலும் வரும் ஆண்டுகளில் புதிய காலிபணியிடமே இருக்காது என்ற சூழ்நிலை காணப்படும் என்றார்.

மேற்கொண்ட காரணங்களை வைத்துப்பார்த்தால் இரண்டு ஆண்டுகாலம் சார்ட் ரிக்கார்டு நோட்டு படித்தபாடங்கள் என ஆசிரியர் பயிற்சி பெற்று இத்தனை  ஆண்டுகாலம் போராடியது வீண் என்றாகிவிடும் போல் உள்ளது. இவை அனைத்தும் உண்மை செய்திகளே யார் வேண்டுமானலும் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.

தீர்வு

 1) இனி அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

2)தொடக்கப்பள்ளியில் மழலையர்கல்வி கொண்டு வர வேண்டும் இதற்கு என தனியாக ஆசிரியர் நியமனம் செய்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்,
3)அரசு பள்ளிகளில் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இனி பதவி உயர்வுக்கு அவர்களுக்கு 6-14 வயதுடைய குழந்தை இருந்தால் அவர்களை அரசு பள்ளியில் சேர்த்தால் முன்னுரிமை கொடுத்து பதவி உயர்வு அளித்தல் வேண்டும் இனிவரும் புதிய அரசு உழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதை கட்டாயப்படுத்த வேண்டும். ஏன் என்றால் உயர் அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை பார்க்க பள்ளிகளுக்கு வரும் போது அங்கு உள்ள குறைகளை எளிதாக களைய அரசுக் பரிந்துரைக்க வழிவகை செய்ய முடியும்.

4) கம்யூட்டர் பொது அறிவு யோக சிறப்பு பயிற்சிகள் போன்ற புதிய பாடத்திட்டங்களை  தனியார் பள்ளிகளுக்கு இனையாக அதற்கேற்ற தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்தல் வேண்டும்.

5)பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி படுத்தும் வகையில் அவர்களுக்கு என்று காலை மற்றும் மாலை சிறப்பு பேருந்து இயக்கவேண்டும்.

6) விளையாட்டு செஸ் போன்ற பள்ளி அளவிலான போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இனையாக அரசுபள்ளி மாணவர்களும் பல சாதனைகளை படைக்க அதற்கேற்ற விளையாட்டு உபகரணங்கள் மற்றும் முறையான பயிற்சி அளித்தல் வேண்டும்.

7)இனையதளத்தின் மூலம் அதிவேக இனையதளம் மூலம் பள்ளியின் கற்றல் கற்பித்தலை கல்வித்துறையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வரவேண்டும். ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையில் வருகையை கண்காணிக்க வேண்டும்.

8) மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புனர்வுடன் அவர்களுக்கு
சுத்தமான தண்ணீர் கழிப்பறை போன்ற வசகிகளை செய்து தரவேண்டும்.

9) மாணவர்களுக்கு புதிய முறையிலான smart class முறையில் பாடம் நடத்த வேண்டும் அதற்கு ஏற்ற முறையில் புதிய மென்பொருள்களை பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். 

10)மாணவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற சீறிய சிந்தனையில் ஆசிரியர்கள் தன் குழந்தை போல் பிற குழந்தைகளையும் பாவிக்க வேண்டும். 

மதிப்பிற்குறிய ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள் 
சம்பள உயர்வு பணிமாற்றம் போன்றவற்றிற்கு போராடும் நீங்கள் இனி வரும் காலங்களில் உங்கள் மாணவர்களின் நலனுக்காக அவர்களின் கல்விக்காக அரசிடம் இந்த பத்து கோரிக்கைகளையும் பெற போராடுங்கள் உண்ணாவிரதம் கூட இருங்கள் நல்ல செயலுக்கு இருந்தால் தவறு இல்லை தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வாருங்கள் அவர்களுக்கு நீங்கள் தானே பாடம் நடத்தப்போறீர்கள் மற்ற பிள்ளைகளுக்கு சிறப்பான முறையில் பாடம் நடத்தும் போது உங்கள் பிள்ளைக்கு நன்றாக நடத்த மாட்டீர்களா இது எனது பணிவான வேண்டுகோள் இதில் தவறு இருந்தால் என்னை மண்ணியுங்கள் தனியார் பள்ளிகளில் 5000 ரூபாய்க்கும் குறைவாக சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு சிறப்பாக சொல்லிக் கொடுக்கும் போது 20000 ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கும் நீங்கள் இதைவிட சிறப்பாக பாடம் நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்னை இந்த அளவுக்கு ஒரு வலைதளத்தை ஏற்படுத்தி கருத்து கூற அறிவை புகட்டியது அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

குருகுலம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement