Ad Code

Responsive Advertisement

உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு நாளை இறுதி விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பு

பள்ளிக்கல்வித்துறையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு சார்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணை பட்டியலில் 370ஆக பட்டியலிடப்பட்டதால் விசாரணைக்கு எட்டவில்லை. ஆகையால் அரசு சார்பில் விசாரணையை விரைவில் முடித்து தீர்ப்பு வழங்க கோரி நாளை விசாரணை பட்டியலில் வரிசை எண்.20க்குள் வழக்கை கொண்டு வர நீதியரசரை கோரியுள்ளது.

இதையடுத்து விசாரணை நாளை முடிக்கப்பட்டு தீர்ப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நாளை வழக்கு இறுதி விசாரணைக்கு வரும் பட்சத்தில் இறுதி முடிவு எட்டும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement