Ad Code

Responsive Advertisement

பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமன கலந்தாய்வு

கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 312 பேருக்கு இன்று கடலூரில் கலந்தாய்வு நடக்கிறது. கடலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கான கலந்தாய்வு கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலத்தில் இன்று காலை 9:00 மணிக்கு நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் தேர் ச்சி பெற்ற 312 பேரில் தமிழில் 10 பேரும், ஆங்கிலத்தில் 101, கணிதத்தில் 31, அறிவியலில் 63, சமூக அ றிவியலில் 107 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் தேவையான இடங்களை விட கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் இந்த இரு பாடங்களுக்கு கடலூர் மாவட்டத்தில் பணி வாய்புகள் குறைவாகவே உள்ளது. இதனால் இங்கு பணி கிடைக்காதவர்களுக்கு விழுப்புரம், நாகை, அரியலூர் மாவட்டங்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வில் பணி வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிகிறது. இதற்கு மாறாக தமிழ், ஆங்கிலம் சமூக அறிவியல் பாடங்களில் தேவைக்கு குறைவானர்களே தேர்ச்சி பெற்றுள்ளதால் இந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் கடலூர் மாவட்டத்திலேயே பணி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, மாவட்டத்தில் தமிழ் பாடத்திற்கு 40க்கும் மேற்பட்ட இடங்களும், ஆங்கிலத்தில் 120க்கும் மேற்பட்ட இடங்களும், சமூக அறிவியல் பாடத்திற்கு 200க்கும் மேற்பட்ட இடங்களும் காலியாக உள்ள நிலையில் இந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் குறைவாக இருப்பதால், இந்த பாடங்களுக்கான காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப முடியாத நிலை ஏற்படும் எனத் தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement