Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர்களால் நடத்தப்படும் இரத்த தான முகாம்

 தன் இரத்ததிலிருந்து உயிர் கொடுப்பது நம் தாய் மட்டுமல்ல ! நாமும் தான்... இரத்த தானம் செய்தால் மட்டுமே ....!! என்ற வரிகளை மெய்பிக்கும் வகையில் இந்த சமுதாயத்தின் ஒளி விளக்காக விளங்கும் ஆசிரியர்கள் முற்றிலும் பொதுநலம் நோக்கம் உடையவர்கள் என்பதற்கேற்ப முதன் முறையாக ஆசிரியர்களால் நடத்தப்படும் இரத்த தான முகாம்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த உயர்நிலை,மேல்நிலை பள்ளி ஆசிரியர்களால் வரும் 05.09.2014 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு (சர்வபள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள்)  06.09.2014அன்று  கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் இரத்த தான முகாம் நடைபெற இருக்கிறது.
     இந்த முகாம் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. சா.மார்ஸ் M.sc,M.Phil,M.Ed மற்றும் கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட அலுவலர் திருமதி கோ.தனமணி M.SC,.M.ED அவர்கள் தலைமையிலும் மாவட்ட தலைமை மருத்துவர் திரு.டாக்டர்.வி.உதயக்குமார் MBBS,MD  மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக பொது செயலாளர் திரு.சுந்தரமுர்த்தி M.A,M.Ed,M.Phil அவர்களின் முன்னிலையிலும் மற்றும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக விழுப்புரம் மாவட்ட துனைத் தலைவர் திரு.அ.இரவிச்சந்திரன் M.sc,M.Phil,B.Ed, மாவட்ட தலைவர் திரு.ந.செல்வராஜ் M.Sc,M.Ed,மாவட்ட இணை  செயலாளர் திரு.மணி M.sc,M.Phil,B.Ed மாவட்ட அமைப்பு செயலாளர் திரு.வ.விசுவலிங்கம் M.Sc,M.Ed மற்றும் சின்னசேலம் வட்ட செயலாளர் எம்.முருகன் M.sc,M.Phil,M.Ed மற்றும் கள்ளக்குறிச்சி,சின்னசேலம்,ரிஷிவந்தியம்,தியாகதுருகம், சங்கராபுரம் வட்ட, மாவட்ட நிர்வாகிகளின் முழு ஒத்துழைப்புடன் இன் நிகழ்வு நடைபெற இருப்பதால்,அதுசமயம் ஆசிரியர் பெருமக்கள் திரளாக வந்து இரத்த தான முகாமில் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை நிகழ்த்தவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

           மேலும் இரத்த தானம் செய்யும் ஆசிரியர்கள் அனைவருக்கும் இலவசமாக முழு உடற் பரிசோதனை செய்யப்படும்.முகாமில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளவும்.தொடர்பிற்கு 9791224233,9486330801,9789226462.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement