Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் தற்கொலை விவகாரம் ஆசிரியர்கள் மீது வழக்குகள் எவ்வளவு : டி.ஜி.பி.,க்கு ஐகோர்ட் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் 5 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கை, மாணவர்களை துன்புறுத்தியதாக ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் மீது பதிவான வழக்கு விபரங்களை டி.ஜி.பி., தாக்கல் செய்ய வேண்டும்,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

தஞ்சாவூர் மனத்திடல் ஜான் கென்னடி தாக்கல் செய்த மனு: நடுக்காவிரி செயின்ட் தாமஸ் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்தேன். அங்கு கல்வியராயன்பேட்டை தெய்வராஜ் மகன் படித்தார். அவர் 2012 மார்ச் 7ல் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அம்மாணவருக்கு தேர்வில் மதிப்பெண் குறைந்தது. அவரை கண்டித்ததால் தற்கொலை செய்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் என் மீது நடுக்காவிரி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.ஆசிரியர்களுக்கு மாணவர்களின் நலன் முக்கியம். மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடப்பர். மாணவர்களை துன்புறுத்தும் நோக்கில், ஆசிரியர்கள் நடக்க மாட்டார்கள். என் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை.திருவையாறு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து, விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். வழக்கை (எப்.ஐ.ஆர்.,) ரத்து செய்ய உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் அருண்பிரசாத் ஆஜரானார்.நீதிபதி: இவ்வழக்கில், கோர்ட்டே தானாக முன்வந்து டி.ஜி.பி.,யை எதிர்மனுதாரராக இணைத்துக்கொள்ள உத்தரவிடுகிறது. பள்ளி, கல்லூரிகளில் 5 ஆண்டுகளில் தற்கொலை செய்த மாணவர்கள் எண்ணிக்கை, மாணவர்களை துன்புறுத்தியதாக ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதல்வர்கள் மீது பதிவான வழக்கு விபரங்களை செப்.,23 ல் டி.ஜி.பி., தாக்கல் செய்ய வேண்டும், என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement