Ad Code

Responsive Advertisement

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கல்வி தரத்திற்கு 'ஸ்மைலி' குறியீடு

மத்திய கல்வி வாரிய (சி.பி. எஸ்.இ.,) பாடத் திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரம் குறித்த, ஆசிரியரின் கருத்துக்களை குறிப்பிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

கல்வித் தரத்தை மேம்படுத்த... : இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் அறிக்கையில் கூறியிருப்பதாவது: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர் எழுதும் தேர்வுகளில், அவர்களுடைய செயல்பாடு குறித்து ஆசிரி யர்கள், 'வெரி குட், குட், புவர், வெரி புவர்' என, குறிப்பு எழுதி வந்தனர். இனிமேல், இதற்கு பதிலாக, ஸ்மைலிகளை (சிரித்த முகம்) பயன்படுத்த வேண்டும். தங்களுடைய கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டிய குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான, சிறந்த சின்னங்களை ஒட்டி, அவர்களை ஊக்குவிக்க வேண்டும். யாருக்கும், 'பேட், புவர்' என்று எழுதக்கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பா.ஜ., கட்சியின், ரமண் சிங் தலைமையிலான சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தின் பல பள்ளிகளில், 'ஆசிரியர் குறிப்பு' என்ற பகுதியில், நட்சத்திரம் அல்லது 'கார்ட்டூன் கேரக்டர்' அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் செயல்திறனுக்கேற்ப, ஒன்று முதல் ஐந்து நட்சத்திர சின்னம் ஒட்டப்படுகின்றன.
சில பள்ளிகளில், மாணவர்களின் கைகளில், அவர்களுக்கு பிடித்தமான கார்ட்டூன் கதாபாத்திரங்களின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, ஊக்குவிக்கப்படுகின்றனர்.

ஆழமான தாக்கத்தை... : ஆசிரியர் குறிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து, உளவியல் டாக்டர் குப்தா கூறியதாவது: நோட்டுப் புத்தகங்களில் ஆசிரியர்கள் எழுதும் குறிப்புகள், மாணவர்களிடையே ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 'வெரி குட்' அல்லது 'குட்' கிடைத்தால், அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மாறாக, 'பேட்' அல்லது 'புவர்' போன்ற குறிப்புகளால், நாள் முழுவதும் அவர்களை கவலையில் ஆழ்த்தி, கவனச் சிதறலை ஏற்படுத்துகிறது. எதிர்மறையான குறிப்புகளை மாணவர்களுக்கு தரக்கூடாது. அது பெற்றோர் மத்தியிலும் மோசமான விளைவுகளை உருவாக்கும். சி.பி.எஸ்.இ.,யின் இந்த முடிவு போற்றத்தக்கது. குழந்தைகளுக்கு, 'ஸ்மைலி பேஸ்' வழங்குவதன் மூலம், அவர்களிடையே நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க முடியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். சி.பி.எஸ்.இ.,யின் இந்த புதிய முடிவை, பள்ளி முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் வரவேற்று உள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement