விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் உள்பட 18 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் அரசு அறிவித்துள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
பள்ளிகளில் சிறப்பாக மாணவ, மாணவிகளுக்கு சேவைப்பணி செய்து வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழாண்டில் நாளை ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற அறிவிக்கப்பட்டுள்ளவர்களின் விவரம் வருமாறு:
மாதங்கோவில்பட்டி, சி.எஸ்.ஐ.தொடக்கப்பள்ளி- சா.ஜான்மார்ட் (தலைமையாசிரியர்), சிப்பிப்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி-சந்தராஜ்(தலைமையாசிரியர்), ராமுத்தேவன்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- தங்கலட்சுமி (தலைமையாசிரியை), மேலேந்தல் டி.இ.எல்.சி தொடக்கப்பள்ளி- வி.வின்சென்ட்(தலைமையாசிரியர்), சுக்கிலநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-க.விஜயமீனா(தலைமையாசிரியை), அ.முக்குளம் இந்து தொடக்கப்பள்ளி-ஆ.ரேவதி(தலைமையாசிரியை), டி.மானகசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இ.ராஜேஷ்(தலைமையாசிரியர்), கான்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- த.கலையரசி(தலைமையாசிரியை), நரையங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி-ஜெயக்குமார்ஞானராஜ்(இடைநிலை ஆசிரியர்), ஜோகில்பட்டி அரசு ஆசிரியர் பயிற்சி நிலையம்-த.வைரமுத்து(முதல்வர்),
பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம்-ஆர்.கைலாசவாணி(முதுநிலை விரிவுரையாளர்), மேட்டமலை, சௌத்சைடு மெட்ரிகுலேசன் பள்ளி-ஆர்.சாந்தி(முதல்வர்), அருப்புக்கோட்டை சாலியர் மேல்நிலைப்பள்ளி-ஆர்.இளங்கோவன்(தலைமை ஆசிரியர்), காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி-சின்னமநாயுடு(தலைமையாசிரியர்), சேத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி-எம்.அனுசுயா(தலைமையாசிரியை), ராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி-இரா.அய்யாசாமி(தலைமை ஆசிரியர்), ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி-வி.சீனிராஜ்(தலைமையாசிரியர்), விருதுநகர் சுப்பையா நாடார் அரசுமேல்நிலைப்பள்ளி-து.பழனிச்சாமி(முதுகலை ஆசிரியர்)ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கிறது.
எனவே நிகழாண்டில் பள்ளியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாணவ, மாணவிகளிடம் அன்போடு பழகி நல்ல வழிகாட்டு ஆசிரியராகவும் இருக்க வேண்டும். இதுபோன்ற சேவை செய்தவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று நல்லாசிரியர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள எம்.ஜி.ஜி.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிற விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது பெருகிற ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்க பணம், பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவைகளை கொண்டதாகும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயகுமார் தெரிவித்தார்
1 Comments
Best wishes..
ReplyDeleteஅனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை