Ad Code

Responsive Advertisement

இரண்டு ஆண்டுகளுக்கு TET தேர்வு வேண்டாம் தேர்வர்கள் வேண்டுகோள் - தினத்தந்தி

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடை நிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இடைநிலை ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்ட 1,649 பேர் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்கள்

தமிழ்நாட்டில் அரசு தொடக்கப்பள்ளிகளில் காலியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

தேர்ச்சி பெற்றவர்கள் ஏற்கனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெற்ற மதிப்பெண், ஆசிரியர் பயிற்சியில் எடுத்த மதிப்பெண் ஆகியவற்றை கொண்டுவெயிட்டேஜ் மதிப்பெண் தயாரிக்கபப்பட்டது.

தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியீடு

அவர்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த பட்டியல் நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 1,649 பேர் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்று ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி எழுதியவர்கள் காத்திருந்தனர். ஆனால் குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தகுதி தேர்வு வேண்டாம்

இது குறித்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படாதவர்கள் கூறுகையில் இனிமேல் ஆசிரியர் தகுதி தேர்வை 2 வருடத்திற்கு நடத்தாமல் இப்போது காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களை கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்யவேண்டும் என்று வேண்டுகோள்விடுத்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement