முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, பல மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், நேற்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இறுதி தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கோஷம் எழுப்பினர். பின், சில தேர்வர்கள், டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளியை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர்.
இதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை மாதம் தேர்வு நடந்தது. ஓர் ஆண்டை கடந்த நிலையிலும், இன்னும், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடவில்லை. 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய நடந்த தேர்வில், தமிழ் ஆசிரியருக்கு மட்டும், தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின், பணி நியமனமும் நடந்துவிட்டது.
மற்ற பாடங்களுக்கு, இறுதி பட்டியல் வரவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு, இறுதி பட்டியல், விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன் சேர்த்து, முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலையும் வெளியிட வேண்டும். இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.
இதுகுறித்து, அறிவொளி கூறுகையில், ''பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட்டதும், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை