Ad Code

Responsive Advertisement

அரசு வங்கிகளில் கிளார்க் பணியில் சேருவதற்கான IBPS தேர்வு அறிவிப்பு...

இந்தியாவில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கிளார்க் பணியில் சேருவதற்கு Institute of Banking Personnel Selection (IBPS) நடத்தும் பொது எழுத்துத்தேர்வு என்ற தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்தேர்வு வருடத்துக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்படும். CWE Clerks-IV தேர்வு பற்றிய அறிவிப்பை IBPS அறிவித்துள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பதவி: Clerical Cadre (CWE Clerks -IV)
வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 18-28க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் கணினியில் அலுவலக பணிகளை செய்வதற்கான கோர்ஸ் படித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த மாநிலத்தில் பணியில் சேர விரும்புகிறாரோ அந்த மாநில மொழியில் எழுத, வாசிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: தமிழ்நாடு மாநில கோடு எண்: 41
புதுச்சேரி கோடு எண்: 37
தேர்வு மையங்கள்: சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி,வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, நாகர்கோவில்
விண்ணப்பக் கட்டணம்: SC/ST மற்றும்  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.600. கட்டணத்தை செலுத்துவதற்கான செல்லான் படிவங்களை www.ibps.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து Bank of Baroda, Bank of India, Central Bank of India, Indian Overseas Bank, Punjab National Bank, United Bank of India, Bank of Maharashtra போன்ற 7 வங்கிகளில் ஏதாவதொரு வங்கியில் கட்டணத்தை செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை Debit Card அல்லது Credit Card அல்லது Internet Banking மூலம் ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2014 ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 01.09.2014செல்லான் படிவம் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.09.2014 ஆன்லைன் தேர்வு இலவச பயிற்சிக்கான அழைப்பு கடிதத்தை 17.11.2014 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 06.12.2014, 07.12,2014, 13.12.2014, 14.12.2014, 20.12.2014, 21.12.2014, 27.12.2014 ஆகிய தேதிகளில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் தேர்வு (CWE) முடிவுகள் 2015 ஜனவரி மாதம் வெளியிடப்படும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement