Ad Code

Responsive Advertisement

பி.எஸ்ஸி. நர்ஸிங்: ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் கலந்தாய்வு

பி.எஸ்ஸி. நர்ஸிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


பி.எஸ்சி. நர்சிங், பி.ஃபார்ம், பிபிடி உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த 18-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன.

சுமார் 25 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடர்பாக தேர்வுக்குழு அதிகாரிகள் கூறியது: பி.எஸ்ஸி. நர்ஸிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement