Ad Code

Responsive Advertisement

60,000 கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு அரசு மருத்துவ காப்பீட்டு திட்டம்

தொடக்க வேளாண்மை சங்கத்தின், 60,000 பணியாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம், விரிவுபடுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துஉள்ளார். 

சட்டசபையில், 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும், அரசு மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நுகர்வோர் பண்டகசாலைகள், விற்பனை சங்கங்களில் பணிபுரியும், 60,000 பணியாளர்களுக்கும், விரிவுபடுத்தப்படும். காப்பீட்டு கட்டணம், 12.54 கோடியை, பணியாளர்கள் ஏற்றுக் கொள்வர்.100 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின், முகப்புத் தோற்றத்தை பொலிவூட்டுதல், பெட்டக வசதி, குளிர்சாதன வசதி ஆகிய கட்டமைப்பு வசதிகள், 6.90 கோடி ரூபாயில் ஏற்படுத்தப்படும்.மத்திய கூட்டுறவு வங்கிகளின், 18 கிளைகளிலும், இதேபோன்ற உள் கட்டமைப்பு வசதிகள், 12.60 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்.மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், 19 கிளைகள், நகரக் கூட்டுறவு வங்கிகள் சார்பில், இரு கிளைகள் புதிதாகத் துவங்கப்படும்.கூட்டுறவு வங்கிகளின் சேவைகளை, மொபைல் போன் மூலம் பெறும் வசதி, ஒரு கோடி ரூபாய் செலவில், அறிமுகம் செய்யப்படும்.பழங்குடி மக்களுக்குத் தேவையான, வேளாண் இடு பொருட்களை அளிக்கும் வகையில், நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்ட தொல் பழங்குடியினர் பல்நோக்கு கூட்டுறவு சங்கம், கோத்தகிரி வட்ட மலைவாழ் பழங்குடியினர் பல்நோக்கு கூட்டுறவு சங்கம்; தர்மபுரி மாவட்டம், சிட்டிலிங்கி மலைவாழ் மக்கள் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஆகியவை துவங்கப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement