Ad Code

Responsive Advertisement

ஆகஸ்ட் 4-இல் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் - தினமணி

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுப் பட்டியல் திங்கள்கிழமை (ஆக.4) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக இந்தப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தேர்வுப் பட்டியல் மற்றுமொருமுறை முழுமையாக மீண்டும் சரிபார்க்கப்படுவதால் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேருக்கான -வெயிட்டேஜ்- மதிப்பெண் ஜூலை 14-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இந்த 42 ஆயிரம் பேரிலிருந்து வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அடங்கிய தேர்வுசெய்யப்படுகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement