Ad Code

Responsive Advertisement

33 நாட்களில் செவ்வாய் கிரகத்தில் மங்கள்யான்

இன்னும், 33 நாட்களில், மங்கள்யான் விண்கலம், செவ்வாய் சுற்று வட்டப் பாதையை அடையும்' என, இஸ்ரோ தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, இஸ்ரோ சார்பில், கடந்தாண்டு நவம்பரில், மங்கள்யான் விண்கலம், பி.எஸ்.எல்.வி.சி., 25 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
அடுத்த மாதம், 24ல், இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதையை சென்றடையும் வகையில், விஞ்ஞானிகள் திட்டம் வகுத்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரோ, 'பேஸ்புக்' பக்கத்தில், இதுகுறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அதில், 'மங்கள்யான் விண்கலம், செவ்வாயின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, 90 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ளது. சுற்று வட்டப் பதையை சென்றடைய, இன்னும், 33 நாட்களே உள்ளன. அதேநேரத்தில், பூமியிலிருந்து, 1,890 லட்சம் கி.மீ., தொலைவில், மங்கள்யான் விண்கலம் உள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement