Ad Code

Responsive Advertisement

TNTET Today Case details(01.07.2014)

இன்று challenging key answer தொடர்பான பல்வேறு வழக்குகள் நீதிபதி நாகமுத்து அவர்களின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் தாள் 1 க்கான வழக்குகள் மாலை 3 மணி வாக்கில் முதலில் எடுத்துக் கொள்ளப்பட்டது .சைக்காலஜி வினாக்களில் ஒரு வினாவிற்கு மதிப்பெண் அளிக்கும் வாய்ப்பு இருந்தது.

ஆனால் இனிமேலும் காலதாமதத்தை ஏற்படுத்தக் கூடாது,மீண்டும் குழப்பத்தை உண்டுபண்ணக் கூடாது எனும் நோக்கங்களில் அவ்வினாவிற்கு மதிப்பெண் அளிக்கப் படவில்லை.தாள் 1 ஐ பொறுத்தவரை ஒன்று அல்லது 2 வழக்குகளைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்டன.

தாள் இரண்டு மாலை 4.15  மணி வாக்கில் விசாரணைக்கு வந்தது.தாள் இரண்டிற்கு கூடுதலாக 2 மதிப்பெண் வழங்கப் படலாம் என்ற நிலை இருந்தாலும் குறைந்த பட்சம் ஒரு மதிப்பெண்ணாவது ஆங்கில வினா ஒன்றிற்கு வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏனெனினும் நேரமின்மையால் அவ்வினா குறித்து முழுமையான விவாதம் நடை பெறவில்லை.

ஒருவேளை நாளைக்கு ஏதேனும் ஒரு மதிப்பெண்ணாவது கூடுதலாக வழங்கப் பட்டால்  மீண்டும் re-result,மீண்டும் CV தான்.

ஆனால்  நாளை நடைபெறும் உரையாடலைப் பொறுத்தே மதிப்பெண் வழங்குவதும்,வழங்கப் படாததும் தெரியவரும். 

நாளை காலையிலேயே GP அவர்களையும்,வினாக்களுக்கு விளக்கம் அளிக்கும் experts களையும் வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement