Ad Code

Responsive Advertisement

தமிழ்ப் பாடநூல்களை விரைந்து விநியோகிக்க வேண்டும்

கர்நாடகத்தில் தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடநூல்களை விரைந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அந்த மாநில அரசுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.தாமோதரன் வெளியிட்ட அறிக்கை: கர்நாடகம் முழுவதும் செயல்படும் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் மட்டும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் தமிழ் மொழியை முதல் மொழிப் பாடமாக பயின்று வருகின்றனர்.

ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் மாணவர்களுக்கு முதல் சுற்றுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். ஆனால், பல பள்ளிகளில் தமிழ்ப் பாடநூல்கள் இதுவரை விநியோகிக்கப்படவில்லை.

இந்த பாடநூல்கள் சந்தையில் விற்பனைக்கு கிடைப்பதும் இல்லை. இதனால், தமிழ்ப் பாடங்களை நடத்த முடியாமல் ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது மாணவர்களின் கல்வியை வெகுவாகப் பாதித்துள்ளது.

நிகழாண்டு முதல் பத்தாம் வகுப்பு பாடத் திட்டம், தேர்வுமுறை மாற்றப்பட்டுள்ளது. பள்ளிகள் தொடங்கி பல மாதங்களாகியும் தமிழ்ப் பாடநூல்கள் வழங்காமல் இழுத்தடிப்பது தமிழ் மாணவர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவதை போல உள்ளது.

முதல்மொழிப் பாடமாக தமிழ் பயிலும் மாணவர்கள், மூன்றாம் மொழிப் பாடமாக கன்னடம் படிக்க வேண்டும். ஆனால், தமிழ் மாணவர்களுக்கு மூன்றாம்மொழி கன்னடப் பாடநூலும் வழங்கப்படவில்லை.

இதனால், பத்தாம் வகுப்பு மாணவர்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, ஆயிரக்கணக்கான தமிழ் மாணவ, மாணவிகளின் நலன் கருதி தமிழ்ப் பாடநூல், மூன்றாம் மொழி கன்னடப் பாடநூல்களை உடனடியாக வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement