Ad Code

Responsive Advertisement

பெங்களூரு - அரசு கல்லூரிகளில் 5 ரூபாய்க்கு மதிய உணவு

பெங்களூருவில் உள்ள அரசு கல்லூரிகளில் 5 ரூபாய்க்கு மதிய உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, கர்நாடக செய்தித் துறை அமைச்சர் ரோஷன் பெய்க் தெரிவித்தார்.
பெங்களூருவில் வியாழக்கிழமை மகாராணி, ஆர்.சி. அரசு கல்லூரிகள் இணைந்து நடத்திய மகாத்மா காந்தியின் தத்துவங்கள் தொடர்பான மாநாட்டில் அவர் பேசியது: பெங்களூருவில் உள்ள அரசு கல்லூரிகளான மகாராணி, ஆர்.சி.கல்லூரி உள்ளிட்ட 6 அரசு கல்லூரிகளில் ரூ. 5 விலையில் மதிய உணவு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

குறைந்த விலையில் மதிய உணவு அளிப்பது குறித்து முதல்வர் சித்தராமையாவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. விரைவில் உயர் கல்வி அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பார்.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால், 5 ரூபாயில் மாணவர்கள் மட்டுமன்றி, 10 ரூபாயில் ஆசிரியர்களுக்கும் உணவு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

பெங்களூருவில் உள்ள அரசு கல்லூரிகளில் ஊரகங்களில் உள்ள ஏழை மாணவர்கள் வந்து படிக்கின்றனர்.

அவர்கள் காலை 6 மணிக்கே தங்களது வீட்டிலிருந்து புறப்படுவதால், மதிய உணவை கொண்டு வர இயலாது.

எனவே, குறைந்த விலையில் மதிய உணவுத் திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

மேலும், மகாத்மா காந்தியின் தத்துவங்களை இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement