Ad Code

Responsive Advertisement

வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்கள் ராக்கிங் குறித்து அறிக்கை அனுப்பவேண்டும் கல்லூரி நிர்வாகத்துக்கு கலெக்டர் உத்தரவு

அனைத்து கல்லூரிகளில் ராக்கிங் செய்வது குறித்து வார அறிக்கை அனுப்பவேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை கேலி மற்றும் ராக்கிங் தடுப்பு குழு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கலெக்டர் நந்தகோபால் தலைமை தாங்கினார். டிஆர்ஓ பலராமன் மற்றும் துறை ரீதியான அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
கல்லூரிகளில் பல பெண்கள் மற்றும் ஆண்கள் சேருவதற்கே அச்சப்படுகிறார்கள். ஏனென்றால் கல்லூரிகளில் கேலி செய்வதும், ராக்கிங் செய்வதும் இதற்கு காரணம். இதனால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதை தடுக்க தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கேலி மற்றும் ராக்கிங் செய்வது அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில் தான் கேலி வதை செய்வது அதிகமாக இருக்கிறது. தனியார் கல்லூரிகளில் குறைவாக காணப்படுகிறது.
கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் உண்மையான, அன்பான மாணவர்களாக இருக்கவேண்டும். மற்றவர்களை துன்புறுத்தி சந்தோஷமாக இருக்கக்கூடாது. கல்லூரியில் இருக்கும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை கூறவேண்டும்.
கல்லூரிகளில் மாணவர்கள் கேலி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒவ்வொரு வாரமும் கல்லூரிகளில் கேலி செய்வது மற்றும் ராக்கிங் குறித்து வார அறிக்கை அனுப்பவேண்டும்.
பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வித்தியாசம் கிடையாது. இந்த ஆண்டு முதல் வேலூர் மாவட்டம் கேலி வதை 100 சதவீதம் இல்லாமல் இருக்கவேண்டும் என்றார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement