Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் காலி பணியிடங்கள்; சிறப்பு வகுப்பு துவக்குவதில் சிக்கல்?

ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடங்கள் தொடர்வதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


இந்த மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டு பொதுத்தேர்வுகளில், நூறு சதவீத தேர்ச்சி இலக்கை அடையஅரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து அரசு பள்ளிகளிலும் 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சிறப்பு வகுப்புகளுக்கு மாணவர்கள் தயாராக உள்ளநிலையில் பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் முதுகலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தொடர்ந்து காலியாகவே உள்ளன. ஜூன் 17-29ம் தேதி வரை கலந்தாய்வில்ஏராளமான, ஆசிரியர்கள் தங்கள் விரும்பிய பள்ளிகள், சொந்த மாவட்டங்களுக்குபணியிட மாறுதலாகி சென்று விட்டனர். இதனால் ஓராண்டுக்கு மேலாக காலியாக உள்ள 225 பணியிடங்கள், தற்போது மேலும் அதிகரித்துள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்களால் தின வகுப்புகள், மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த இயலவில்லை.முதன்மைக்கல்வி அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில்,""மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். அப்போது மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும்,''என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement