Ad Code

Responsive Advertisement

எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வு முடிவு நாளைவெளியீடு!

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலானவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்புதுணைத்தேர்வு முடிவு நாளை(வெள்ளிக்கிழமை) வெளியிடப்படுகிறது. 

நாளை வெளியீடு கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத்தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் (தட்கல் தனித்தேர்வர்கள் உட்பட) மதிப்பெண் சான்றிதழ்களை நாளை(வெள்ளிக் கிழமை) பிற்பகல் முதல் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது. அங்கு தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படமாட்டாது. கடந்த ஆண்டு நடந்த சிறப்பு துணைத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த ஆகஸ்டு 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் விநியோகிக்கப்பட்டது.ஆனால் இந்த வருடம் தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட புதிய நடைமுறைகளினால், கடந்த ஆண்டைவிட இவ்வாண்டு ஒரு மாதம் முன்னதாகவே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுகிறது. 

மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் உரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு 21 முதல் 23–ந்தேதி வரை நேரில் சென்று மறுகூட்டல் கட்டணத்துடன் கூடுதலாக ஆன்–லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50ஐ பணமாகச் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மறுகூட்டல் கட்டணம் இரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் – ரூ. 305/– ஒரு தாள் கொண்ட ஒவ்வொரு பாடத்திற்கும் – ரூ. 205/– விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகைச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுத் துறையால் பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் மறுகூட்டல் முடிவுகள் பற்றி அறிய இயலும் இந்த தகவலை அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement