Ad Code

Responsive Advertisement

தாட்கோ கடனுதவி திட்டங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் கடனுதவி திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஆன்லைன்மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 55 வயது வரை. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ. ஒரு லட்சமாகும். நிலம் மேம்படுத்துதல் திட்டத்திற்கு இரு பாலாரும் விண்ணப்பிக்கலாம்.


 தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்திற்கு வயது வரம்பு 18 முதல் 55 வயது வரையாகும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. ஒரு லட்சமாகும். வாகனத் திட்டத்திற்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ஜ் மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும். பெட்ரோல் டீசல், எரிவாயு, விற்பனை சில்லரை நிலையம் அமைப்பதற்கு குடும்ப ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ரூ.3 லட்சமாகும்.

 மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முடிநீக்க மையம், ரத்த பரிசோதனை நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சமாகும்.  இத்திட்டத்திற்கு எம்.பி.பி.எஸ், பி.எஸ்.எம்.எஸ், பி.டி.எஸ், பி.பி.டி, டி.பார்ம், பி.பார்ம், லேப்டெக்னீஷியன் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அரசு அங்கீகார நிறுவனத்தில் உரிய பதிவு செய்திருக்க வேண்டும்.

 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல், 60 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.ஒரு லட்சமாகும்.

 மேலாண்மை இயக்குநரின் விருப்புரிமை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் விதவைகள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்திற்கு வயது வரம்பு இல்லை.

 இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுதுவோர் தமிழ்நாடு தேர்வாணையத்தொகுதி 1 முதல் நிலைத் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நிதியுதவி பெற 21 வயது நிரம்புபவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு இத்திட்டத்திற்கு இல்லை.

 பட்டய கணக்கர், செலவு கணக்கர்களுக்கு நிதி உதவி வயது வரம்பு 25 வயது முதல் 45 வயது வரை குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இத்திட்டத்திற்கு இல்லை.

 இந்த திட்டங்களில் பயன்பெற விரும்புவோர்கள் என்ற ட்ற்ற்ல்:ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்.ற்ஹட்க்ஸ்ரீர்.ஸ்ரீர்ம் என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும் போது குடும்ப அட்டை, இருப்பிட சான்று, சாதிச்சான்று, வருமானச்சான்று, கல்விச்சான்று மற்றும் வயதிற்கான ஆதாரச்சான்று(பள்ளி மாற்றுச் சான்றிதழ்) இவற்றில் ஏதாவது ஒன்றையும் மற்றும் டின் நம்பர் உள்ள நிறுவனத்திடமிருந்து பெற்று விலைப்புள்ளி திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதியையும் அதற்கான இடத்தில் குறிப்பிட்டு அனைத்து சான்றுகளையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.            

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement