Ad Code

Responsive Advertisement

தஞ்சாவூரில் தொடங்கியுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

தஞ்சாவூரில் தொடங்கியுள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள், இணைய தளம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு உடனுக்குடன் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளைச் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு, தஞ்சாவூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. நேற்றும், இன்றும் மொத்தம் 261 இடைநிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டு இணைய தளம் மூலம் காலி பணியிடங்களை தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு உடனுக்குடன் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. 

நேர்மையாக நடைபெற்ற இந்த கலந்தாய்வின் மூலம் தாங்கள் விரும்பிய பள்ளிகளுக்கு எவ்வித சிரமமும் இன்றிபணிமாறுதல் பெற்றுள்ளதாக, ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும், பணிமாறுதல் நடவடிக்கையை எளிமையாக்கி, ஆசிரியர்களின் சிரமத்தை போக்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, கலந்தாய்வில் கலந்துகொண்டவர்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement