Ad Code

Responsive Advertisement

மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை மதுரையில் துவங்கியது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மதுரை மண்டலத்திற்குள்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் கண்பார்வையற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை மதுரையில் துவங்கியது.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் மதுரை மண்டலத்திற்குள்பட்ட மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றோர் 242 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மதுரை ஓசிபிஎம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை துவங்கியது.     

              பள்ளித் தேர்வுகள்துறை இணை இயக்குநர் உமா, மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி ஆகியோர் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது. முதல்நாளில் 125 பேருக்கான சான்றிதழ்கள் சரிபார்ப்புப்பணி நடைபெற்றது. மீதமுள்ள 117 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement