கீழமை நீதிமன்றங்கள் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்றத்துக்கு உட்பட்ட கீழமை நீதிமன்றங்களில் பணியாற்றும் தமிழ் தெரியாத நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பெழுதலாம் என்று உயர் நீதிமன்ற பதிவாளர் 1994ல் சுற்றறிக்கையை வெளியிட்டார்.
ஆனால் அந்த அனுமதி வழங்கியதில் கால வரம்பு குறிப்பிடாததால் தமிழ் தெரியாத நீதிபதிகள் ஆங்கிலத்திலேயே தீர்ப்பளித்தனர்.இவ்வாறு வழங்கிய அனுமதி தமிழ் ஆட்சி மொழி சட்டத்துக்கு முரணானது என்பதால் ரத்து செய்ய வேண்டுமென்று வழக்குரைஞர் சோலை சுப்ரமணியன் என்பவர் நீதிமறத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மனு தள்ளுபடி உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று ரத்தினம் என்பவர் மேல் முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், வி,எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, பதிவாளர் ஜெனரலின் சுற்றிகை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதன் மூலம் நீதிபதிகள் தமிழிலிலேயே தீர்ப்பளிக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை