Ad Code

Responsive Advertisement

உயர்கல்வியில் தரமான ஆசிரியர் பற்றாக்குறை: பிரணாப் கவலை

இந்தியப் பல்கலைகளில், தரமான ஆசிரியர்களின் பற்றாக்குறை இருப்பதால்தான், நமது உயர்கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கவலை தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதும், திறன்வாய்ந்த ஆசிரியர்களை ஈர்ப்பதும் நம் முன்னே உள்ள பெரிய சவால்கள்.

ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழில் துறைகள் அல்லது வெளிநாடுகளிலிருந்து தகுதியுள்ள நபர்களை, குறுகியகால பணி அடிப்படையில் நியமிப்பதன் மூலம், அதிக காலிப் பணியிட பிரச்சினைகளை தீர்க்க முடியும் மற்றும் இதன்மூலமாக தரமும் பாதிக்கப்படாது.

செமினார்கள் மற்றும் ஒர்க் ஷாப்புகளில் கலந்துகொள்ளவும், கூட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் மற்றும் ஆராய்ச்சி வெளியீடுகளுக்கு பங்களிக்கவும், ஆசிரியர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம், அவர்களின் தரத்தை அதிகப்படுத்த முடியும்.

உயர்கல்வி ஆசிரியர்களின் தரம் சிறப்பாக இருந்தால்தான், நம்மால் அத்துறையில் நினைத்த இலக்கினை அடைய முடியும். இதற்கென பலவித திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஸ்மார்ட் கிளாஸ்ரூம் போன்ற நவீன வசதிகளை கிடைக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement