Ad Code

Responsive Advertisement

மருத்துவ படிப்பு 2ம் கட்ட கவுன்சிலிங்: 'கட் ஆப்' விபரம் அறிவிப்பு

மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான 2ம் கட்ட கவுன்சிலிங் நாளை துவங்க உள்ள நிலையில், 'கட் ஆப்' விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.


மருத்துவம் மற்றும் பல்மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நாளை (ஜூலை 21) முதல் 25ம் தேதி வரை நடக்க உள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்கள், முதற்கட்ட கவுன்சிலிங்கில் விடுபட்ட இடங்கள் என 253 இடங்களுக்கு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இந்த கவுன்சிலில் நடைபெறும். அரசு மற்றும் உதவிபெறும் மருத்துவ கல்லூரிகளுக்கான இடங்களில் பொதுப் பிரிவுக்கு 47 இடங்கள், பி.சி., 49, பி.சி., (முஸ்லிம்) 5, எம்.பி.சி., 30, எஸ்.சி., 25, எஸ்.சி., (அருந்ததியினர்) 5, பழங்குடியினர் 2 இடங்கள் உள்ளன. இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் பொதுப்பிரிவு 20, பி.சி., 17, பி.சி., (முஸ்லிம்) 2, எம்.பி.சி., 13, எஸ்.சி., 10, எஸ்.சி., (அருந்ததியினர்) 2, எஸ்.டி., 1 இடம் உள்ளது. சுயநிதி மருத்துவ கல்லூரிகளைப் பொறுத்தவரை, கோவை பி.எஸ்.ஜி., கல்லூரியில் 1, கன்னியாகுமரி மூகாம்பிகை கல்லூரியில் 2, சென்னை கற்பக விநாயகர் கல்லூரியில் 5, கோவை கற்பகம் கல்லூரியில் 7, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் 4, மதுரை வேலம்மாள் கல்லூரியில் 6 இடங்கள் என, மொத்தம் 25 இடங்கள் உள்ளன.

மருத்துவம் 'கட் ஆப்':

2ம் கட்ட கவுன்சிலிங்கில் 'கட்ஆப்' பொது பிரிவு மற்றும் பிற்பட்டோர் பிரிவில் 199.25 முதல் 198.25 வரை உள்ளது. இதில் பி.சி.,முஸ்லிம் 197 வரை; எம்.பி.சி., 197.5 வரை; எஸ்.சி., 194.25 வரை; எஸ்.சி., (அருந்ததியினர்) 191.5 வரை; எஸ்.டி., 186.5 வரை பங்கேற்பர்.

பல் மருத்துவம் 'கட் ஆப்':

பல் மருத்துவத்திற்கு ஜூலை 22 முதல் 2ம் கட்ட கவுன்சிலிங் நடக்க உள்ளது. இதற்கான 'கட் ஆப்' வருமாறு: பொதுப் பிரிவு 197.75, பி.சி., (முஸ்லிம்) 196.5, எம்.பி.சி., 196.5, எஸ்.சி., 192.25, எஸ்.சி., (அருந்ததியினர்) 189, எஸ்.டி., 181 வரை பங்கேற்பர். பிளஸ்2 மதிப்பெண் சரிபார்ப்பு, மறுமதிப்பீடு, மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள், அதன் அடிப்படையில் இதில் பங்கேற்கலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement