Ad Code

Responsive Advertisement

மருத்துவ படிப்பு இடங்கள் நிரம்பின : அடுத்த கட்ட கலந்தாய்வு நடக்குமா

தமிழகத்தில், மருத்துவ படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வில் அனைத்து இடங்களும் நிரம்பின. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 21ம் தேதி துவங்கியது. அரசு, சுய நிதி கல்லூரிகளில், 253 எம்.பி.பி.எஸ்., மற்றும் 1,036 பி.டி.எஸ்., இடங்களும் இருந்தன. ஐந்தாம் நாளான நேற்று, 314 பி.டி.எஸ்., இடங்களுடன் கலந்தாய்வு முடிந்தது. பிற்பகலில், அனைத்து இடங்களும் நிரம்பின.

முதற்கட்ட கலந்தாய்வில், 2,552 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 75 பி.டி.எஸ்., இடங்களும் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தில், ஐந்து மருத்துவக் கல்லூரிகளில், 750 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி தரவில்லை. இதற்கு அனுமதி கிடைத்தால், மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும் என, தெரிகிறது. இதுகுறித்து, மாணவர் சேர்க்கை செயலர் சுகுமார் கூறுகையில், ''சுய நிதி கல்லூரிகளில் அனுமதி கிடைத்தாலோ, அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்கள், மாநிலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டாலோ, இடங்களுக்கு ஏற்ப, மூன்றாம் கட்ட கலந்தாய்வு, செப்டம்பரில் நடத்தப்படும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement