Ad Code

Responsive Advertisement

கட்டடப் பணிகள் முழுமையடையாததால் திருவாரூர் பல்கலைக்கு ஜனாதிபதி வருகை ரத்து

திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி, ரத்து செய்யப்பட்டுள்ளது.திருவாரூரில் மத்திய பல்கலைக் கழகம், 2007ல் துவங்கப்பட்டது.
துவக்க காலத்தில், இட வசதி இல்லாததால், கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில், இப்பல்கலை தற்காலிகமாக செயல்பட்டு வந்தது.இந்நிலையில், திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள நீலக்குடியில், 500 ஏக்கர் பரப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு, துணைவேந்தர், பேராசிரியர்கள், அலுவலர் குடியிருப்புகள் மற்றும் மாணவ, மாணவியர் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள், பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன.

இதன் திறப்புவிழா, இம்மாதம் 19ம் தேதி நடைபெற இருந்தது. இதில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்று, கட்டடங்களை திறந்து வைப்பார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக, பல்கலைக்கழகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், ஆயத்த பணிகள் நடந்து வந்தது. தற்போது இந்த நிகழ்ச்சி, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.கட்டடப் பணிகள் முழுமையடையாததால், நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என, பல்கலை தரப்பினர் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement