Ad Code

Responsive Advertisement

தொடக்கக் கல்வித் துறையில் நிறுத்தி வைக்கப்பட்ட, நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான 'மனமொத்த பணிமாறுதல்' உத்தரவுகள் நேற்று வழங்கப்பட்டன.

நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டத்திற்கான பணிமாறுதல் கலந்தாய்வு, ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை நடந்தது. இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மனமொத்து
பணிமாறுபவர்களுக்கு அந்தந்த டி.இ.இ.ஓ.,க்கள் உத்தரவுகளை வழங்கினர்.

ஆனால் இந்த உத்தரவுகளை நிறுத்தி வைக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட பணியிடங்களில் ஆசிரியர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டது.இப்பிரச்னை தொடர்பாக 'தினமலர்' நாளிதழ் நேற்று செய்தி வெளியிட்டது. இதையடுத்து, உத்தரவு பெற்ற ஆசிரியர்களை அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு காலையே வரவழைத்து, மாறுதல் பெற்ற பள்ளிகளில் சேர அனுமதி வழங்கினர்.அதிகாரி ஒருவர் கூறியதாவது:'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும் நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ஆசிரியர்களுக்கு வழங்க வாய்மொழியாகவே மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது, என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement