Ad Code

Responsive Advertisement

தகவல் உரிமைச் சட்டம்தவறாக பயன்படுத்தக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

தகவல் உரிமைச் சட்டப்படி 10 ரூபாய்க்கு 'ஸ்டாம்ப்' ஒட்டி, அதிக பக்கங்களில் தகவல் கோரினால் வழங்க முடியாது. தேவையற்ற விபரங்களை கண்டபடி கோரினால், அரசு இயந்திரத்தின் வழக்கமான பணி பாதிக்கும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.ஒட்டப்பிடாரம் கனகராஜ். இவர், சுதந்திரத்திற்கு முன் மற்றும் சுதந்திரத்திற்கு பின் தேனி, திண்டுக்கல் மாவட்ட 'எஸ்டேட்'களின் விபரங்களை அளிக்குமாறு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், தேனி கலெக்டர் அலுவலக பொதுத் தகவல் அலுவலரிடம் விண்ணப்பித்தார்.

நில நிர்வாக கமிஷனர்,'மனுதாரர் எந்தெந்த ஆவணங்கள் தேவை என தெளிவாக குறிப்பிடவில்லை. அதிக பக்கங்கள் அடங்கிய விபரங்கள் கோரியுள்ளார். இதனால், வழக்கமான அலுவல் பணி பாதிக்கும். அவசியமான குறிப்பிட்ட விபரங்கள் கோரினால் வழங்கப்படும்,' என நிராகரித்தார். தகவல் வழங்க உத்தவிடக்கோரி, ஐகோர்ட் கிளையில் கனகராஜ் மனு தாக்கல் செய்தார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வக்கீல், “கட்டணம் 65 ஆயிரம் ரூபாய் செலுத்தினால், தகவல் அளிப்பதாக பொதுத் தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார்,” என்றார்.

நீதிபதி: அரசு நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்ற, வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே, தகவல் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது.பல ஆண்டுகளுக்கு முந்தைய தகவல்களை, அதிக பக்கங்களில் வழங்க வேண்டுமெனில், அவற்றைச் சேகரிக்க கூடுதல் பணியாளர்கள் தேவை. 10 ரூபாய்க்கு 'ஸ்டாம்ப்' ஒட்டி, அதிக பக்கங்களில் தகவல் கோரினால் வழங்க முடியாது. நடைமுறைக்கு சாத்தியமற்ற வகையில் தேவையற்ற விபரங்களை, கண்டபடி கேள்வி எழுப்பி கோரக்கூடாது. பல ஆயிரம் பக்கங்கள் அடங்கிய தகவல்களை கோரினால், அரசு இயந்திரத்தின் வழக்கமான பணி பாதிக்கும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement