Ad Code

Responsive Advertisement

பி.எட்., விண்ணப்பம் வினியோக தேதி நீட்டிப்பு

"தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பி.எட்., சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்
வினியோகம், 25ம் தேதி (நாளை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது, '' என, பல்கலைக்கழகப் பதிவாளர் கணேஷ்ராம் தெரிவித்தார். 


அவர் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில், 2007-08ம் கல்வியாண்டு முதல் இளம் கல்வியியல் (பி.எட்.) பட்ட வகுப்புகள் பயிற்று வைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த வகுப்பில் படிக்கும் அனைவரும், நூறு சதத் தேர்ச்சி பெறுகின்றனர். நடப்பு கல்வியாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், ஜூன், 16ம் தேதி முதல் ஜூலை, 16ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது, இந்தப் பல்கலைக்கழகத்தில், முறைசார் கல்வி வழி (ரெகுலர்) பயிற்றுவிக்கப்படும், இளம் கல்வியியல் பட்ட வகுப்புக்கான விண்ணப்பங்கள் பெறவும், நிறைவு செய்து அனுப்பவும் ஜூலை, 25ம் தேதி (நாளை) வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement