Ad Code

Responsive Advertisement

சட்டக் கல்லூரிகளில் 50 விரிவுரையாளர்கள் நியமனம் செப்டம்பர் 21-ல் எழுத்துத்தேர்வு

அரசு சட்டக் கல்லூரிகளில் 50 முதுநிலை விரிவுரையாளர்கள் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார் கள். இதில், சட்டம் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் 30 காலியிடங் களும், ஆங்கிலம், பொருளா தாரம், வரலாறு, அரசியல் அறிவி யல், சமூகவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் 20 காலியிடங் களும் இடம்பெற்றுள்ளன. 


சம்பந்தப்பட்ட பாடத் தில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்ணுடன் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர் எனில் 50 சதவீதம்) நெட் அல்லது ஸ்லெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் ரூ.100 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை ஆகஸ்ட் 26-ம் தேதிக்குள் சமர்ப் பிக்க வேண்டும்.

முதுநிலை விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத்தேர்வு செப்டம்பர் 21-ந் தேதி அன்று நடை பெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செய லாளர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். காலியிடங்கள், கல்வித்தகுதி, தேர்வுக்கான பாடத் திட்டம் உள்ளிட்ட விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement