Ad Code

Responsive Advertisement

சிறார் சட்டத்தை திருத்த அரசு முடிவு: அமைச்சர் மேனகா கோரிக்கை ஏற்பு

சிறார் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கு, மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. நடைமுறையில் உள்ள சிறார் சட்டத்தின்படி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள், சிறாராக கருதப்படுகின்றனர். இந்த வயதுக்குட்பட்டவர்கள், பாலியல் பலாத்காரம் போன்ற கடுமயான குற்றங்களில் ஈடுபட்டாலும், அவர்களுக்கு, குறைந்தபட்ச தண்டனை தான் கிடைக்கும்.
ஆயுள், தூக்கு போன்ற தண்டனைகளை, இவர்களுக்கு அளிக்க முடியாது. ஆனால், சமீபகாலமாக, பாலியல் பலாத்காரங்களில் ஈடுபடுவோரில், 18 வயதுக்குட்பட்ட சிறார்கள், அதிகமாக உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால், 'சிறார் சட்ட வயது வரம்பை, 16 ஆக குறைக்க வேண்டும்' என, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மருத்துவ மாணவி:

டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், மற்றவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டாலும், அந்த குற்றத்தை செய்த, 18 வயதுக்குட்பட்ட சிறாருக்கு, குறைந்தபட்ச தண்டனை தான் வழங்கப்பட்டது. தற்போது, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மேனகா, 'சிறார் சட்டத்துக்கான வரம்பை, 16 ஆக குறைக்க வேண்டும். இதுகுறித்து, பார்லிமென்ட்டில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும்' என, சமீபத்தில் வலியுறுத்தினார்.


வயதில் மாற்றம்:

மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாரத்திடமும், இதுகுறித்து, அவர் வலியுறத்தினார். இதற்கு, ரவிசங்கர் பிரசாத்தும் சம்மதம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து, சிறார் வயது வரம்பில் திருத்தம் மேற்கொள்வதற்கான மசோதா, விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என, தெரிகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement