Ad Code

Responsive Advertisement

பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: தேர்வுக்கூட நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியீடு டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 27–ந் தேதி, ஒருங்கிணைந்த பொறியாளர் பணியில் அடங்கிய பல்வேறு உதவிப் பொறியாளர் பதவிகளில் உள்ள 98 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை நடத்துகிறது. 

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமானwww.tnpscexams.netவெளியிடப்பட்டுள்ளது.நுழைவுச்சீட்டு மேற்படி இணையதளத்தில் இல்லாவிடில், அவ்விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின்(செல்லான்) நகலுடன், பெயர், பதிவு எண், கட்டணம் செலுத்திய அஞ்சலகம் அல்லது வங்கியின் முகவரி ஆகியவற்றை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com–க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement