Ad Code

Responsive Advertisement

பிறப்பு, இறப்பு பதிவு பணி 34 பேருக்கு வேலை தர முடிவு

பிறப்பு, இறப்பு பதிவுக்கு, 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு, இம்மாதம் 31ம் தேதிக்குள், விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், பொது சுகாதாரத் துறையின் கீழ், பிறப்பு, இறப்பு விவரங்கள் பதிவு செய்ய, மாவட்டந்தோறும் மையங்கள் உள்ளன. இந்த மையத்திற்கு, தற்காலிகமாக, 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், 34 புள்ளி விவர தொகுப்பு உதவியாளர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது.மாவட்டந்தோறும் ஒருவரும், தலைமையகத்தில் இரண்டு பேரும் சேர்க்கப்பட உள்ளனர்.இதற்கு, 'பி.எஸ்.சி., கணினி அறிவியல் அல்லது பி.சி.ஏ., படித்து, கணினி பயன்பாடு, தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த சான்றிதழ் படிப்பும் படித்திருக்க வேண்டும். ஆர்வமுள்ளோர், தீதீதீ.tணடஞுச்டூtட.ணிணூஞ் என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இம்மாதம் 31ம் தேக்குள், அனுப்ப வேண்டும்' என, பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement