Ad Code

Responsive Advertisement

சரியான நேரத்தில் வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

மலைப்பகுதி பள்ளிகளில் சரியானநேரத்தில் வராத ஆசிரியர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் நந்தகோபால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஆய்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்உள்ள கூட்டரங்கில் அனைவருக்கும் கல்விஇயக்கத்தின் பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் நடைபெற்றதுகூட்டத்திற்குமாவட்ட கலெக்டர் நந்தகோபால் தலைமைதாங்கினார்கூடுதல் முதன்மை கல்விஅலுவலர் பொன்.குமார் முன்னிலைவகித்தார்.

கூட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள்பயிலும் சிறப்பு மையங்களின்செயல்பாடுகள் குறித்தும்போக்குவரத்துவசதி இல்லா குடியிருப்பு பகுதிகளில் உள்ளமாணவமாணவிகளுக்கு பாதுகாவலருடன்போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதுகுறித்தும்விலையில்லா பொருட்கள்வழங்கப்பட்டது குறித்தும் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டன.

கடுமையான நடவடிக்கை

மேலும் கட்டி முடிக்கப்பட்டுள்ள மற்றும்நிலுவையிலுள்ள பள்ளி கட்டிடப்பணிகள்குறித்தும்பள்ளிகளில் உள்ள கணினிமையங்களில் செயல்பாடுகள் குறித்தும்ஆய்வு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து கலெக்டர் நந்தகோபால்கூறுகையில், ‘மலைப்பகுதிகளில் உள்ளபள்ளிகளுக்கு ஆசிரியைஆசிரியர்கள்சரிவர வருவதில்லை என்று புகார்கள்வருகின்றனஆதலால் இதுபோன்றபுகார்கள் தொடர்ந்து வந்தால்,சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையானநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்என்றார்.



கூட்டத்தில் உதவி தொடக்கக்கல்விஅலுவலர்கள்வட்டார வள மையமேற்பார்வையாளர்கள்துறை சார்ந்தஅலுவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement