Ad Code

Responsive Advertisement

மத்திய பட்ஜெட்: மாதச் சம்பளதாரர்களுக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிப்பு

மத்திய பட்ஜெட்டில் கிடைத்துள்ளவரிச்சலுகையால் மாதச் சம்பளம் பெறும்பிரிவினருக்கு ரூ.40 ஆயிரம் வரை சேமிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.



2014 - 15 பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி விலக்கு உச்சவரம்பு 60 வயதுக்குஉள்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சத்திலிருந்துரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 2.5லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாகஉயர்த்தப்பட்டுள்ளது.

அதே போன்று வருமான வரிச் சட்டம் 80சியின் கீழ் உள்ள முதலீட்டுத் திட்டங்களானபொது வருங்கால வைப்பு நிதி, காப்பீடு,நிரந்தர வைப்பு, வருங்கால வைப்பு நிதிஆகியவற்றில் இதுவரை ரூ.1 லட்சம் வரைமுதலீடு செய்வோருக்கு மட்டுமே வரிவிலக்கு இருந்தது.

இப்போது ரூ.50 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை முதலீடுசெய்வோருக்கு வரி விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.

சொந்தமாக குடியேறியுள்ள வர்களின்வீட்டுக் கடனுக்கான வட்டி மீதான வரிவிலக்கு ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


இந்த மூன்று முறைகளிலும் வரிச்சலுகையை பெறுவோரால் அதிகபட்சமாகரூ.39 ஆயிரத்து 655 வரை சேமிக்க முடியும்என்று நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்றுதெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement