Ad Code

Responsive Advertisement

உலகளவில் சாதிக்க நினைக்கும் மாணவர்களுக்கு அரிய வாய்ப்பு

உலகளவில் விளையாட்டு போட்டிகளில் சாதிக்க நினைக்கும் மாணவ, மாணவியருக்கு அரசு மூலம் நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது.


ஒவ்வொரு ஆண்டும் உலகத் திறனாய்வு திட்டத்தின் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, நகராட்சி, மெட்ரிக் பள்ளிகளில் இருந்து 6,7,8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு உடல் திறன் தேர்வு போட்டி நடத்தி அதில் 8, 9 மற்றும் 10 மதிப்பெண் பெரும் மாணவ, மாணவியருக்கு கல்வி மாவட்ட அளவில் தடகளப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் முதல் இரண்டு இடங்களை பெறுபவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதியுடையவர்கள். மண்டல அளவிலான போட்டிகளில் முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் விளையாட்டு திறமைகளை மாணவ, மாணவியரிடம் இருந்து வெளி கொணர்ந்து, அவர்களை மாவட்ட, மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் சாதனை படைக்க வைப்பதே ஆகும்.

கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் முதல் 10 இடங்களை பெறுபவர்களுக்கு 5 நாட்கள் இருப்பிடமில்லா பயிற்சி முகாமும், அதில் சிறந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கணைகள் ஒரு கல்வி மாவட்டத்திற்கு 60 பேர் வீதம் இரண்டு கல்வி மாவட்டத்திற்கு 120 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 15 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

இப்பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, கையுந்து பந்து, ஹாக்கி, கோ-கோ உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறப்பு பயிற்றுநர்களை கொண்டுசிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.

உலக திறனாய்வு திட்டத்தின் கீழ் வெற்றி பெறும் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு விடுதி, முதன்மை விளையாட்டு மையம், சிறப்பு விளையாட்டு விடுதியில் சேருவதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி, நகராட்சி, மெட்ரிக் பள்ளிகளில் இருந்து உடன்திறன் பகுப்பாய்வு பட்டியலை எதிர்வரும், ஜூலை 15 ம் தேதிக்குள், அந்தந்த மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு பிரிவு, என்ற முகவரிக்கு அனுப்பி வைத்திடல் வேண்டும்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement