Ad Code

Responsive Advertisement

அரசு பணியில் காலியாக உள்ள எஸ்சி பிரிவு இடத்தை 6 மாதத்தில் நிரப்ப வேண்டும் - உயர் நீதிமன்றம்

பெருங்களத்தூரைச் சேர்ந்த, மத்திய, மாநில அரசுகளின் தாழ்த்தப்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறுவனர் எஸ்.கருப்பையா உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

எஸ்சி பிரிவினருக்கான காலி பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த மனுவை தற்காலிக தலைமை நீதிபதி அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரித்தனர். 

அரசு தரப்பில் வழக்குரைஞர் ஆஜராகி, அனை த்து துறைகளிலும் தாழ்த்தப்பட்டோருக்கு 18சதவீதமும், பழங்குடியின ருக்கு 1 சதவீதமும் வேலைவழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. காலியிடங்களை ஆய்வு செய்வதற்காக, உயர்மட்டக் குழு 2012 ஜனவரி 5ம் தேதி அமைக்கப்பட்டது. இது தொடர்பாக, துறைச் செயலர்களுடன்குழு கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கும். அதன் பிறகு, அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தார். இதை ஏற்ற நீதிபதிகள், இந்த பணிகளை உயர் மட்டக்குழு ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement