Ad Code

Responsive Advertisement

3 வயது குழந்தையை அடித்து, தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய ஆசிரியை!!!

3 வயது சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியை, சிறுவனை அடித்து தூக்கி எறிந்து கொடுமைப்படுத்திய காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த துயர சம்பவம் மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்துள்ளது.
சிறுவனை கொடுமைப்படுத்திய காட்சி வீட்டில் வைத்திருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பூட்டிய அறைக்குள் தொடர்ந்து அந்த சிறுவனை அடித்த அந்த ஆசிரியை, சிறுவனை கட்டிலிருந்து மேலையும், கீழேயும் தூக்கி வீசியுள்ளார்.

சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட சிறுவனின் தாயார், உடனடியாக ரகசிய கண்காணிப்புகேமராவை போட்டுபார்த்த போது, ஆசிரியை கொடூர செயல் தெரியவந்தது. ஆந்த ஆசிரியை சிறுவனுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க பணியில் சேர்ந்து 3 நாட்களே ஆகியுள்ளது. பணியில் சேர்ந்த நாள் முதல் சிறுவனை அந்த ஆசிரியை தாக்கி வந்ததாகவும் தெரிகிறது.

இது குறித்து சிறுவனின் பெற்றோர் கூறுகையில், நண்பர் ஒருவர் மூலமாக தான் அந்த ஆசிரியை பணிக்கு சேர்ந்ததாகவும், அவர் பொய்யான முகவரியை கொடுத்துள்ளதாகவும், அந்த ஆசிரியை தங்களிடம் மன்னிப்பு கோரியதாகவும், சம்பவம் குறித்து போலீசில் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதாகவும் கூறினர்.

மேலும் அவர்கள் சம்பவம் நடந்த சில மணி நேரங்களுக்குபின், அந்த ஆசிரியையின் கணவர் வந்து தங்களை மிரட்டியதாகவும் இதன்காரணமாகத்தான் தாங்கள் போலீசுக்கு சென்றதாகவும் கூறினர்.

டில்லியில் ஆசிரியை அடித்து மாணவன் பலி

டில்லியிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியர் அடித்ததில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். 8ம் வகுப்பு மாணவனான அவனை வகுப்பறையை விட்டு வெளியேறுமாறு ஆசிரியர் கூறியுள்ளார். பின்னர் அவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சிறுவன், அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement