சென்னை:தமிழக அரசின், மூன்று மருத்துவக்கல்லுாரிகளில் உள்ள, 175 இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி தராததால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.தமிழகத்தில், 19 அரசு மருத்துவக்கல்லுாரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 2,380 இடங்களுக்கு மட்டுமே, இந்திய மருத்துவக்கவுன்சில் அனுமதி அளித்தது.
அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள, 2,023 இடங்களுக்கு முதற்கட்ட கலந்தாய்வு, ஜூன், 17 முதல், 22ம் தேதி வரை நடந்தது. சுய நிதி கல்லுாரிகளில் இருந்து மாநிலத்திற்கு கிடைத்த, 498 இடங்களுக்கும் சேர்த்து, மொத்தம், 2,521 எம்.பி.பி.எஸ்., இடங்களும், அரசு பல் மருத்துவக்கல்லுாரியின், 85 இடங்களும் நிரம்பின.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு: இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, இரண்டாவது வாரத்தில் துவங்கி, 26ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். முதல் கலந்தாய்வில் விடுபட்ட, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லுாரி - 100 இடங்கள், திருச்சி மருத்துவக்கல்லுாரி - 50 (கூடுதல் இடம்), சேலம் மருத்துவக்கல்லுாரி - 25 (கூடுதல் இடம்) இடங்களுக்கும், இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி தர வேண்டும்.
இந்த இடங்களுக்கு, இன்னும் அனுமதி தரவில்லை. சில சுய நிதி கல்லுாரிகளுக்கும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூலை, இரண்டாவது வாரத்தில் துவங்குமா; பி.இ., கலந்தாய்வு போன்று தள்ளிப்போகுமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவக்கல்வி இயக்கக அதிகாரிகள் கூறுகையில், 'இரண்டாம் கட்ட கலந்தாய்வை, ஜூலை, 26க்குள் முடிக்க வேண்டும். நமக்கு, ஜூலை, 16 வரை அவகாசம் உள்ளது. அதற்குள், அரசு மருத்துவக்கல்லுாரிகளின், 175 இடங்களுக்கும் அனுமதி கிடைத்து விடும் என, நம்புகிறோம்' என்றார்.இதில் விடுபடும் அரசு கல்லுாரி இடங்கள், சுய நிதி கல்லுாரிகளின் அரசு ஒதுக்கீடு இடங்களுக்கும் முறையான அனுமதி கிடைத்ததும், மூன்றாம் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும் என, தெரிகிறது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை