Ad Code

Responsive Advertisement

மாணவர்கள் வராததால் 2 அரசுப்பள்ளிகள் மூடல்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, மாணவர்கள் வராததால், 2 அரசு தொடக்கப்பள்ளிகள் மூடப்பட்டன.


திருவாடானை ஒன்றியத்தில் உள்ள பல அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இல்லாததால் பள்ளிகள் மூடப்படுவது தொடர்கிறது. கடந்த மாதம் கிளியூர் பள்ளியும், நேற்று முன்தினம் கீழக்கோட்டை மற்றும் அறிவித்தி ஆகிய 2 கிராமங்களில் உள்ளஅரசு தொடக்கப்பள்ளிகளும் மூடப்பட்டன. ஆங்கில கல்வி மோகத்தாலும், தங்களது குழந்தைகளை வீட்டிலிருந்து வேனில் ஏற்றி சென்று, மாலையில் வீட்டருகே பாதுகாப்பாக இறக்கி விடுவதாலும், பெற்றோர்கள், திருவாடானையில் உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். திருவாடானை உதவிக்கல்வி அலுவலர் வாசுகி கூறியதாவது: தொடர்ந்து மாணவர்கள் வராததால், கீழக்கோட்டை, அறிவித்தி கிராம தொடக்கப் பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. கீழக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியை, தினைக்காத்தான் வயல் பள்ளிக்கும், அறிவித்தி பள்ளி தலைமை ஆசிரியர், வேறு பள்ளிக்கும் இடமாறுதல் பெற்று சென்று விட்டனர். குறைந்தது 20 மாணவர்களாவது சேரும் பட்சத்தில், மீண்டும் பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, 10 குழந்தைகளுக்கு கீழ் படிக்கும் பள்ளிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது, என்றார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement