தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 253 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் சென்னையில் நடைபெறுகிறது.
சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள 16 பி.டி.எஸ். காலியிடங்களுக்கும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உள்ள 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 1,020 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
இணையதளத்தில் வெளியீடு: முதல் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்ற
சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, உள்ளிட்ட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்பட்டுள்ள 14 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், அண்மையில் இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளித்த திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் 85 எம்.பி.பி.எஸ். இடங்கள், எம்.சி.ஐ. அனுமதி அளித்த திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியின் 43 கூடுதல்
எம்.பி.பி.எஸ். இடங்கள், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரியின் 21 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி அரசு ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை அளித்து வரும் சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியின் 65 எம்.பி.பி.எஸ். இடங்கள், முதல் கட்ட கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்ற 7 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 25 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் என மொத்தம் 253 எம்.பி.பி.எஸ். இடங்கள் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வகுப்புவாரியாக காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரம் தமிழக சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org-இல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை