Ad Code

Responsive Advertisement

100 அரசுப் பள்ளிகளுக்கு விளையாட்டு சாதனங்கள் - தமிழக அரசு

இந்த கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.20 லட்சத்தில் விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளிக்கும்போது அமைச்சர் வீரமணி வெளியிட்ட அறிவிப்பு:


மாணவர்கள் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக பள்ளிகளில் சதுரங்கப் போட்டிகளை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார். விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு ரூ.10 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார். அதன் தொடர்ச்சியாக 100 பள்ளிகளுக்கு விளையாட்டுச் சாதனங்கள் வழங்கப்படுகின்றன.

32 மாவட்டங்களில் அறிவியல் கண்காட்சி: தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் அறிவியல் கண்காட்சி ரூ.32 லட்சம் செலவில் நடத்தப்படும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement