டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) தேர்வில், பள்ளி கல்வித் துறைக்கு, பணி ஒதுக்கீடு பெற்ற, 1,500 இளநிலை உதவியாளர்கள், இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை.
இதுகுறித்து, கல்வித் துறை பணியாளர்கள் கூறியதாவது: பணி நியமன பணியை மேற்கொள்ள வேண்டிய இணை இயக்குனர் கருப்பசாமி, பல்வேறு பணிகளில், 'பிசி'யாக உள்ளார். இதனால், பணி நியமன வேலை இழுத்துக் கொண்டே செல்கிறது. பல பிரிவுகளில், பணியாளர் இல்லை. மாநில அளவில், கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளிலும், இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது. தேர்வு பெற்றவர்களை உடனே பணி நியமனம் செய்திருந்தால், அலுவலகங்களில் வேலையும் நடந்திருக்கும்; அவர்களும், நான்கு மாதங்களாக, சம்பளம் பெற்றிருப்பர். தற்போது, எதற்குமே வழியில்லாமல் காத்திருக்கின்றனர். கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்ற அனைத்து இளநிலை உதவியாளர்களையும், உடனே பணி நியமனம் செய்ய, உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை